நடிச்சது 14 படம்! சங்கர் போட்ட கண்டீசன்! நம்பி வாய்ப்பை இழந்த நடிகருக்கு இப்படியொரு செக்..

shankar ramcharan kiaraadvani RC15
By Edward Sep 16, 2021 11:33 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து கோடிகளில் பட்ஜெட்டை வைத்து பல கோடி வசூலை பெறவைக்கும் திறமை கொண்டவர் இயக்குநர் சங்கர். சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பினை ஆரம்பித்து விபத்து கொரோனா என தள்ளி சென்று வருகிறது.

அப்படத்தில் நடிகர் கமலும் சங்கரும் கவனம் செலுத்த தவரவிட்டுவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில், தெலுங்கு சினிமாவில் 14 படங்கள் மட்டும் நடித்து கொடிக்கட்டி பறக்கும் நடிகராக திகழும் ராம் சரணை வைத்து இயக்குவதால் தமிழில் நல்ல வரவேற்பு பெறலாம் என்ற ஆசையில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், சங்கர் ராம் சரண் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு RC-15 என பெயரிடப்பட்டுள்ளது. அதிக நாட்கள் ராம் சரணிடம் சங்கர் கால்ஷீட் கேட்டுள்ளதால் இடையில் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்ற கண்டீஷனையும் போட்டுள்ளார் சங்கர்.

இதனால், ஒரு படத்தில் கமிட்டாகிய ராம் சரண் சங்கர் கதையை நம்பி அந்த படத்தினை வேண்டாம் என தூக்கி போட்டுள்ளார். இப்படம் நன்றாக வெளியாகி நல்ல விமர்சனம் பெற்றால் தான் ராம் சரணின் கேரியர் உயரும் என கூறி வருகிறார்கள்.