ரஜினி-விஜய்யை தூக்கி சாப்பிட்ட ராம் சரண்..! கோடியில் புறளவைத்த இயக்குனர் சங்கர்..

rajini tollywood prabhas shankar ramcharan
By Edward Dec 29, 2021 03:08 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் லிஸ்ட் வெளியானால் அதில் முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் தான் இடம் பிடிப்பார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலான சினிமாத்துறையில் பணியாற்றி தன் மார்க்கெட்டால் சம்பளத்தை நிர்ணயிக்கும் நடிகர்களும் உண்டு, மார்க்கெட்டிற்காகவும் தன்னுடையை பிராண்ட்டிற்காகவும் சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றுவதும் உண்டு.

அப்படி சமீபத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தினால் 100 கோடி சம்பளத்தை 70 ஆக குறைத்துள்ளார். அஜித் 50 கோடிக்கு மேலும் விஜய் 80கோடிக்கு மேலும், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்டவர்கள்40 கோடிக்கு மேலும் சம்பளம் வாங்குகிறார்கள். அதேபோல் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தால் 35 கோடியாக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தெலுங்கு சினிமாவிற்கு சென்று ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ஆர்சி15 என பெயரிடப்பட்ட படத்தினை இயக்கி வருகிறார்.

அப்படத்திற்காக ராம் சரண் சுமார் 100 கோடி அளவில் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. தற்போது பிரபாஸுக்கு இணையாக தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் ராம் சரண்.