ரூ. 77 ஆயிரம் கோடி சொத்தின் வாரிசு!! ராம் சரணின் மனைவி யார் தெரியுமா?
ராம் சரணின் மனைவி
தென்னிந்திய சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் நடிகர் ராம் சரண். பிரமாண்ட படங்களில் நடித்துள்ள ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி தொழிலதிபராக இருந்து வருகிறார். ரூ. 77 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசாக உபாசனா இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த மருத்துவ நிறுவனமான அப்பல்லோ மருத்துவமனையின் தலைவரான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். உபாசனாவின் தாயார் ஷோபனா காமினேனி அக்குழுமத்தின் xecutive Vice-Chairperson-ஆக திகழ்ந்து வருகிறார்.
உபாசனா பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். குடும்ப உறவுகளைத்தாண்டி உபாசனா கார்ப்பரேட் உலகில் குறிப்பிடத்தக்க பதவிகளிலும் இருந்து வருகிறார்.
சொத்து மதிப்பு
அப்படி சம்பாதித்து ராம் சரண் மற்றும் உபாசனாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2500 கோடிக்கு மேல் இருக்கும். சினிமாவில் நடித்து ராம் சரண் பங்களிப்பாக ரூ. 1270 கோடியும் உபாசனாவின் பங்கு ரூ. 1130 கோடியும் இருக்கிறது. தனிப்பட்ட சொத்துக்களை தாண்டி, ரூ.77 ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தின் வாரிசாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஏற்கனவே உபாசனாவின் தாத்தா, அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரான பிரதாப் சி. ரெட்டியின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 22 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.