ரஜினிகாந்த் நல்ல நடிகரா..? எனக்கு தெரியாது.. சர்ச்சையை கிளப்பிய இயக்குநர்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வேட்டையன் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த கையோடு, ஜெயிலர் 2 படத்தில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய பேட்டி பெரும் சர்ச்சையை இணையத்தில் உண்டாக்கியுள்ளது.
இதில், "நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியாது" என அவர் கூறியுள்ளார்.
மேலும் "Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் சாதாரண கதாபாத்திரங்களில் அவரால் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என ரஜினி குறித்து ராம் கோபால் வர்மா இவ்வாறு பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களிடைய கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.