அந்த நடிகை தான் வேண்டும்ன்னு அடம்பிடித்த நடிகர்!! துளிக்கூட மதிக்காத நடிகை மீனா..
80, 90களில் ரஜினி, கமல், விஜயகாந்துக்கு போட்டியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர் தான் நடிகர் ராமராஜன். சினிமாவில் இருந்து பல ஆண்டுகளாக விலகி இருந்த ராமராஜன் தற்போது மீண்டும் கதநாயகனாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
துணை நடிகராக என்னால் நடிக்க முடியாது என்று கூறி தற்போது 62 வயதிலும் சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்தும் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படம் வெளியாகாத நிலையில் புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உத்தமன் என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதற்கு முழு காரணம் ராமராஜன் அந்த நடிகை தான் வேண்டும் என்று இயக்குனரிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால் நடிகை மீனாவோ இன்றுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம். தற்போது மீனாவுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் அவருக்கென ஒரு பெயர் இருக்கிறது.
தற்போது மலையாளத்தில் மீனா பெரிய நடிகரின் படத்தில் நடித்து வருவதால் எப்படி ராமராஜனுடன் நடிப்பது என்ற யோசனையில் சம்மதம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறாராம். இதனால் ராமராஜன் என்ன செய்யபோகிறார் என்று அப்படத்தின் இயக்குனர் முழித்து வருகிறாராம்.