ராமராஜன் நளினி விவாகரத்துக்கு நான் காரணமா!! ரகசியத்தை உடைத்த சேது பட நடிகை..

Ramarajan Tamil Actress Actress
By Edward Feb 09, 2026 12:45 PM GMT
Report

80களில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் ராமராஜன். நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராமராஜன், பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதற்கு காரணம் ராமராஜன் ஜோதிடம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், அதன் காரணமாக விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

ராமராஜன் நளினி விவாகரத்துக்கு நான் காரணமா!! ரகசியத்தை உடைத்த சேது பட நடிகை.. | Ramarajan Plan To Marry Abitha Actress Reacts

இன்னொரு தரப்பில் சேது படத்தின் நாயகி அபிதாவை கனெக்ட் செய்தும் கிசுகிசுக்கள் பேசப்பட்டது. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த கிசுகிசு குறித்து மெளனம் கலைத்துள்ளார் நடிகை அபிதா.

நடிகை அபிதா

அதில், ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார், அதனால்தான் அவருக்கும் நளினிக்கும் விவாகரத்தானது என்றெல்லாம் சொன்னார்கள். அதைக்கேட்டு ரொம்ப ஃபீல் செய்து அழுது கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆரம்பத்தில் ரொம்ப அழுவேன், காலம் போகப்போக சரி இப்படி பேசுவதும் அவர்களுக்கு ஒரு வேலை என்று சொல்லிவிட்டுவிடுவேன் என்று அபிதா கூறியிருக்கிறார்.