அந்த நபரின் இழப்பு கனகாவை அதிகம் பாதித்தது.. நடிகர் ராமராஜன் பேட்டி!!

Ramarajan Kanaka Indian Actress Actress
By Dhiviyarajan May 20, 2024 12:38 PM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் கனகா. இவர் ராமராஜன் நடிப்பில் 1989 -ம் ஆண்டு வெளியான "கரகாட்டக்காரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். பல ஆண்டுகளாக சினிமாவில் விலகி இருந்த கனகா, பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் ராமராஜன் கனகா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது ஒருவர் உங்களை பார்க்க கனகா வந்து இருக்கிறார் என்று சொன்னார்கள். நானும் சென்று பார்த்தேன். கனகா வெயிட் போட்டு தலையில் சிகப்பு நிற டை அடித்து ஆளே மாறியிருந்தார். அதை பார்த்தவுடன் அதிர்ச்சி ஆனேன். இதற்கு மேல் அதை பற்றி பேசவிரும்பவில்லை.ஆனால் ஒன்று அவரது அம்மா உயிரிழப்பு கனகாவை ரொம்பவே பாதித்தது என்று ராமராஜன் தெரிவித்துள்ளார்.    

அந்த நபரின் இழப்பு கனகாவை அதிகம் பாதித்தது.. நடிகர் ராமராஜன் பேட்டி!! | Ramarajan Speak About Kanaka