கமலின் முன்னால் காதல் நடிகையுடன் வெளிநாடுக்கு பறந்த ராமராஜன்!! சந்தேககப்பட்டு நடிகை நளினி செய்த செயல்..
தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் ராமராஜன். ராமநாராயணனிடம் 20 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்கவும் செய்தார் ராமராஜன். பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ராமராஜன் உதவி இயக்குனராக இருந்த போதே நடிகை நளினி அவரை காதலித்து வந்துள்ளார். அதன்பின் தான் இருவரும் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார் நளினி. தற்போது நளினி, ராமராஜனை சந்தேகப்பட்டு செய்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின் ராமராஜன் மீது சந்தேகம் வந்துவிட்டது. அந்தவகையில் ஊருவிட்டு ஊருவந்து படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை கெளதமியுடன் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார் ராமராஜன்.
நளினிக்கு ராமராஜனுக்கு இடையே ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்து அவர்கள் போன 3 நாட்கள் கழித்து நளினியும் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வர தெரிவித்துள்ளார்.
நம்ம ஊரு நாயகன், பொண்ணுக்கேத்த புருஷன், ராஜா ராஜா தான், எங்க ஊரு மாப்பிள்ளை, பொங்கி வரும் காவேரி, எங்க ஊரு காவல் காரன், ஊருவிட்டு ஊருவந்து ஆகிய படங்களில் ராமராஜனுடன் கவுதமி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video