ஏமாற்றிய காதலர்!! திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை கல்பனா ஐயர்

Modern Dance Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Feb 16, 2026 07:01 AM GMT
Report

கல்பனா ஐயர்

மாடல், நடிகை, மிஸ் இந்தியா, டான்ஸர் என்று பல திறமைகளை கொண்டு 80களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கல்பனா ஐயர். 1981ல் அர்மான் என்ற படத்தின் பாடலான ரம்பா ஹோ சம்பா ஹோ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானார் கல்பனா.

அப்பாடல் 45 ஆண்டுகளுக்கு பின் ரன்பீர் சிங், சாரா அர்ஜுன் நடித்த துரந்தர் படத்தில் ரீமேக் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் டிரண்ட்டாகியது.

ஏமாற்றிய காதலர்!! திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை கல்பனா ஐயர் | Ramba Ho Song Famous Kalpana Iyer Painful Story

தன்னுடைய 12 வயதில் குடும்ப கஷ்டம் காரணமாக கிடைத்த வேலைகளை செய்து வந்தார் கல்பனா. நடனத்தின் மீது ஈடுபாடு அதிகமாக நடனபள்ளியில் சேருமளவிற்கு பணம் இல்லாததால் பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டார்.

அப்படி ஒரு கலை நிகழ்ச்சியில் நடனமாடியதன் மூலம் கல்பனாவுக்கு, பெரிய நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைதொடர்ந்து பல முயற்சிக்குப்பின் 1973ல் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார்.

பின் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அப்போது தான் அர்மான் படத்தில் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்து அதில் ஆடி மிகப்பெரியளவிற்கு பிரபலமானார்.

ஏமாற்றிய காதலர்!! திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை கல்பனா ஐயர் | Ramba Ho Song Famous Kalpana Iyer Painful Story

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கல்பனா, ரஜினிகாந்துடன் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள என்ற பாடலுக்கு நடனமாடி தமிழிலும் பிரபலமானார்.

அம்ஜித் கானை காதலித்து

வில்லன் நடிகரான அம்ஜித் கானை காதலித்து சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அந்த காதல் கைக்கூடாததால், மனமுடைந்துபோன கல்பனா, சினிமாவைவிட்டு விலகி 90ஸ் காலக்கட்டத்திலேயே துபாயில் செட்டிலாகினார்.

ஏமாற்றிய காதலர்!! திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை கல்பனா ஐயர் | Ramba Ho Song Famous Kalpana Iyer Painful Story

துபாய்-க்கு சென்றாலும் அம்ஜித் கானை மறக்க முடியாமல் தவித்த கல்பனா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அண்மையில் திருமண விழாவில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு கல்பனாவா இது என்ற ரியாக்ஷனை நெட்டிசன்கள் கொடுத்து வருகிறார்கள்.

Gallery