கை இல்லாத பெண்ணுக்காக நடிகை ரம்பா கணவர் செய்த உதவி
Rambha
By Yathrika
நடன நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு கலைஞரும் தங்களது திறமையை வெளிக்காட்டி மக்களின் பேராதரவையும் பெற்ற வருகிறார்கள். இந்த நடன நிகழ்ச்சியின் நடுவர்களாக சாண்டி, ரம்பா மற்றும் ஸ்ரீதேவி உள்ளனர்.
அடுத்தடுத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நடன நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆதிரா என்பவர் ஒரு கை இல்லை என்றாலும் தன்னம்பிக்கையுடன் நடனம் ஆடி வந்தார். தற்போது அவருக்கு செயற்கை கை பொறுத்துவதற்கு உதவி செய்துள்ளார் நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன்.
இந்த தகவலை அறிந்ததும் மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.