தோனியை நேரில் சந்தித்துள்ள பிரபல தமிழ் சினிமா நடிகர்.. புகைப்படம் இதோ

MS Dhoni Actors Tamil Actors
By Kathick Feb 02, 2026 03:00 AM GMT
Report

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பல விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். ரசிகர்களின் மனம் கவர்ந்த விளையாட்டாக இது உள்ளது. கிரிக்கெட் என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர்களில் ஒருவர் மஹேந்திர சிங் தோனி.

தோனியை நேரில் சந்தித்துள்ள பிரபல தமிழ் சினிமா நடிகர்.. புகைப்படம் இதோ | Ramesh Tilak Meets Dhoni Photo Goes Viral

இந்தியாவுக்காக விளையாடி 28 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவர் மீது தனி மரியாதை அனைவருக்கும் உண்டு. அதே போல் சி எஸ் கே-வில் விளையாடி தமிழக மக்களின் தல-யாகவும் மாறினார்.

வருகிற 2026 ஐபிஎல் போட்டிதான் இவருடைய கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படுகிறது. ஆனால், அதை தோனி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை நேரில் சந்தித்துள்ள பிரபல தமிழ் சினிமா நடிகர்.. புகைப்படம் இதோ | Ramesh Tilak Meets Dhoni Photo Goes Viral

இந்த நிலையில் எம்.எஸ். தோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பிரபல தமிழ் சினிமா நடிகர் நடிகர் ரமேஷ் திலக் தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

புதிய விளம்பரத்தில் எம்.எஸ்.தோனியுடன் ரமேஷ் திலக் நடித்திருப்பதாக தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட செம லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்: