கார் டிரைவர்னு எல்லாம் பார்க்க மாட்டார்!! சில்க் ஸ்மிதாவின் ரகசியத்தை உடைத்த ரம்யாகிருஷ்ணனின் கணவர்..
80, 90களில் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிய நடிகையாக திகழ்ந்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களைவிட அவரை பார்க்க திரையரங்கிற்கு கூடிய ரசிகர்கல் பட்டாளம் ஏராளம். அப்படி இருந்த நடிகை சில்க் ஸ்மிதா, தற்கொலை செய்து மரணமடைந்தது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. சினிமாத்துறையில் பல பிரபலங்களுடன் நெருக்கமாக பழகி வந்த சில்க் ஸ்மிதா பற்றி அவருடன் பயணித்த அனுபவங்களை பலர் பகிர்ந்து வருவார்கள்.
அந்தவகையில் இயக்குனரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருடமான கிருஷ்ணா வம்சி, சில்க் ஸ்மிதாவுடன் பயணித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ஆரம்பகாலக்கட்டத்தில் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம். ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்வேன். அப்படி இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் என்னை அறிமுகப்படுத்த ஒருவர் என்னை அழைத்து சென்றார்.
அவரிடம் வேலைக்கு சேர்ந்து நான் செய்யும் வேலைகளை பார்த்த சில்க் ஸ்மிதா பாராட்டினார். தயாரிப்பில் இறங்கிய சில்ஸ் ஸ்மிதா, அவர் தயாரித்த ஒரு படத்தில் சில மாதங்கள் வேலை செய்திருக்கிறேன். அவரிடம் வேலை பார்த்தப்பின் தான் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது இயக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ முன் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். என்னை கடந்து ஒரு கார் சென்றது.
அந்த காரில் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. நான் அந்த காரை பெரிதாக கவனிக்காமல் சிக்ரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். கடந்து சென்ற கார் என்னஒ நோக்கி திரும்பி வந்து வேகமாக பிரேக் போட்டு நின்றது. காருக்குள் இருந்த சில்க் ஸ்மிதா கண்ணாடியை இறக்கியதை பார்த்ததும் ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டேன்.
என்னை பார்த்து என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று சில்க் ஸ்மிதா கேட்க, உங்களை மறக்க முடியுமா, நீங்கள் என்னைநினைவில் வைத்திருக்கிறீர்களா? இல்லையா என்று பலமுறை யோசித்திருக்கிறேன் என்று நான் கூறினேன். பின் நான் இயக்கிய படங்களை பார்த்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறி சில்க் ஸ்மிதா பாராட்டினார்.
தனிக்குடித்தனத்துக்கு ஆசை.. அந்த நடிகையுடன் உறவு!! ஜிவி பிரகாஷ் பற்றி அதிர்ச்சி தகவலை சொன்ன பயில்வான்..
சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரை கார் டிரைவராக இருந்தாலும் சரி ஒரு மேக்கப் மேனாக இருந்தாலும் சரி தன்னிடம் வேலை செய்வர்களாக இருந்தாலும் சரி அவர்களை தன் சொந்தக்காரர்கள் போல் தான் நடத்துவார் என்று கிருஷ்ணா வம்சி கூறியிருக்கிறார்.