ராஜமாத சிவகாமியா இது? 51 வயதில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..
வெள்ளை மனசு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் க்ளாமர் நடிகையாக டிஸ்கோ சாந்திக்கே டஃப் கொடுத்து வந்தார்.
நீலாம்பறி டூ சிவகாமிதேவி
அதன்பின் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகையாக ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பறியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
90களில் நீலாம்பறியாகவும் தற்போதைய சினிமா காலத்தில் பாகுபலி படத்தில் ராஜ மாதா சிவகாமியாகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். 51 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
டஃப் கொடுக்கும் இளமை
இன்னும் இளமையுடன் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவா லைகர் சமீபத்தில் நடித்திருந்தார். தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.