மருமகள் ஐஸ்வர்யா ராய் பற்றி கேள்வி கேட்ட பெண்!! மாமனார் அமிதாப் சொன்ன வார்த்தை..
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஆராத்யா என்ற மகளை பெற்று வளர்ந்து வந்தார்.
சினிமாவில் இருந்து விலகி வாழ்க்கையை பார்த்து வந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கணவருடம் கருத்து வேறுபாட்டால் பிரிந்தும் விவாகரத்து பெறவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா சோசியல் மீடியாக்களில் தன்னைப் பற்றியும் தன் உடல்நிலை பற்றியும் தவறான தகவல்களை பரப்பப்பட்டு வருவதாகவும் இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ஒரு பதிவினை பகிர்ந்து அதை நீக்க க்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அமிதாப் பச்சன்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் மருமகள் பற்றி கேள்வி கேட்டுள்ளார். அமிதாப் பச்சனிடம் ஐஸ்வர்யா ராய் அழகு குறித்து வியந்து பேசியபோது, ஆமாம் அவர் அழகு என்பது எனக்கு தெரியும் என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும் அந்த பென், ஐஸ்வர்யா ராய் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அவர் மிகவும் அழகு சார், நீங்க அவருடன் தானே வசிக்கிறீர்கள் எனக்கு அழகாய் இருக்க ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அமிதாப் பச்சன், நான் ஒரு விசயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்துபோகும். ஆனால் இதயத்தில் இருக்கும் அழகுதான் மிகவும் முக்கியம் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.