ஏன்டா ரஜினியின் அந்த படம் பண்ணோம்னு இருந்திச்சு!! உண்மையை உடைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..

Rajinikanth Ramya Krishnan Gossip Today Jailer
By Edward Aug 08, 2023 06:15 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 80, 90-களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 13 வயதில் வெள்ளை மனசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய ரம்யா கிருஷ்ணன் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பாவில் நீலாம்பரியும் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமிதேவியும் தான் மிகப்பெரிய இடத்தையும் பெயரையும் கொடுத்தது. தற்போது பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்துள்ள ரம்யா கிருஷ்ணன், பல மொழி, பலவிதமான படங்களில் நடித்து அல்டிமேட் லேடி ஸ்டார் என்ற படத்திற்கு வர காரணம் என்ன என்றகேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ஏன்டா ரஜினியின் அந்த படம் பண்ணோம்னு இருந்திச்சு!! உண்மையை உடைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.. | Ramya Krishnan Open Doing Rajini Movie Negative

அது என்னுடைய அதிர்ஷ்டம் தான் சொல்ல வேண்டும். ஏன்டா படையப்பா படத்துல நெகட்டிவ் ரோல் பண்ணுனோம்னு தான் அந்த படத்தில் நடிச்சேன். ஆனால், மிகப்பெரிய இடத்தை கொடுத்தது படையப்பா.

50 வருட சினிமா வாழ்க்கையில், படையப்பா படத்திற்கு பின் என்னுடைய கரியரில் அடுத்த 15 வருடத்தில் கிடைத்தது, அதன்பின் அடுத்த 15 வருட கரியரை கொடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார். நீலாம்பரியாக நடித்தது பயமாக இல்லை, நான் சந்தோஷமா இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்கு திமிருலாம் இல்லை, என்ன ஆகுமோ என்று நீலாம்பரியாக யோசித்திருந்தேன்.

Gallery