எல்லா வேலக்காரிங்களும் ஏமாந்திட்டாங்க! வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மீம்ஸ்..

1 week ago

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 14வயதிலேயே சினிமாத்துறைக்கு காலெடி எடுத்து வைத்த ரம்யா கிருஷ்ணன், வெல்லை மனசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து நீலாம்பறி என பெயர் எடுத்த ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தின் மூலம் ராஜமாதா என்ற பெயரையும் பெற்றார்.

பல விருதுகளை தன்னுடைய நடிப்பால் பெறப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த படத்தின் காட்சிகளை எடுத்து சமுகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை கிரியேட் செய்து பகிர்வது வழக்கம். அதுபோல், ரம்யா கிருஷ்ணன் சில படங்களில் எஜமானியம்மாவாக நடித்திருப்பார்.

படையப்பா உள்ளிட்ட சில படங்களில் வேலைக்காரிகள் அவர் காதலித்தவரை திருமணம் செய்வார்கள். தற்போது அதை வைத்து நெட்டிசன்கள் எல்லா வேலைக்காரிங்களும் என்னை ஏமாத்துறாங்க என்ற மீம்ஸை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்