சேத்துவெச்ச மொத்த புகழும் காலி ஆக்டுமோ!! அந்த ஒரே கதாபாத்திரத்திற்காக பயந்து போன நீலாம்பரி..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து, ரஜினி, கமல், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வ்நதார்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு பல ஆண்டுகள் கழித்து படையப்பா-வின் நீலாம்பரி கதாபாத்திரம் மிகப்பெரியளவில் கைக்கொடுத்தது. அதன்பின் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி ரோலும் வரவேற்பை கொடுத்தது.
அப்படி, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். அப்படத்தில் விலைமாது பெண்ணாக நடித்திருந்தார்.
ஆனால் முதல் அப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சேத்து வைத்த நீலாம்பரி, சிவகாமி தேவி பெயரெல்லாம் கெட்டுப்போய்விடும் என்று பயந்து போனாராம்.
ஆனால் படத்தின் இயக்குனர் தகுந்தமுறையில் நிதானமாக கதையை கூறி, அதேபோல் கதாபாத்திரம் கெடாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்திருக்கிறார். அப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.