கருப்பனுக்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் நடிகை ரம்யா பாண்டியன்! யார் தெரியுமா?

biggboss ramyapandian tamilactress Raman Aandalum Ravane Aandalum talevision
By Edward Sep 18, 2021 06:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் விருது வாங்கியப்பின் சில காலம் வாய்ப்பில்லாமல் இருந்தார். இதையடுத்து மொட்டைமாடி போட்டோஷுட் எடுத்து டிரெண்ட்டாகினார்.

பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கபோவது யார், குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டாப் 5 இடத்தை பிடித்தார். இதன்மூலம் பல படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த ரம்யா பாண்டியன், பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் யாருக்கு சமீபத்தில் முத்த கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு யாருக்கும் இல்லை கருப்பனுக்கு கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் கருப்பன் வெள்ளையன் என்ற இரு மாடுகள் நடித்துள்ளது. அதை தான் தான் முத்தம் கொடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.