உனக்கு நடிக்க வரல! சூர்யாவை மேடையில் போட்டு கொடுத்த பிரபல நடிகர்..

suriya rana daggubati எதற்கும் துணிந்தவன் EvarikiThalaVanchadu etharkum thunivan
By Edward Mar 04, 2022 08:34 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் ஆர்டரில் இருக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் ஜெய் பீம் படத்திற்கு பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார்.

வரும் மார்ச் 10ல் தியேட்டரில் வெளியாக இருக்கும் இப்படம் தெலுங்கு  மொழியில் EvarikiThalaVanchadu பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா மற்றும் படக்குழுவினர் ஹைதராபாத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று பேசியுள்ளார் ராணா டகுபதி.

சூர்யாவும் நானும் எடிட்டிங் விஷ்யம் தொடர்பாக காரில் ஹைதராபாத் முழுவதும் சுற்றி பார்க்க சென்றோம். அப்போது என் படத்தினை பார்த்த சூர்யா உனக்கு நடிக்க வரவில்லை என்று கிண்டல் செய்தார்.

இதற்கு உடனே ராணாவை கட்டியணைந்து சிரித்துள்ளார். அதற்கு ராணா அந்த 3 மணிநேரம் கொடுத்த அறிவுரை தான் பாகுபலியில் பல்லால் தேவன் ரோலில் அப்படி நடித்தேன் என்று பெருமையுடன் கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.