வேலைக்கு செல்லாமலே ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வருமானம்!! கோடிகளில் புறளும் நடிகை ஆலியா - ரன்பீர்...
ஆலியா - ரன்பீர்
பாலிவுட் சினிமாத்துறையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஆலியா பட். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் ஆலியா பட், குழந்தை பெற்றப்பின்பும் நடித்து வருகிறார்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஸ்லிம்மாக காணப்படும் ஆலியா பட், சமீபத்தில் நடந்த Cannes 2026 திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்.
படங்கள், விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டர்கள், தொழில்கள் என மாதம் பல கோடிகள் சம்பாதிக்கும் ஆலியா பட் - ரன்பீர் கபூ ஜோடி, மேலும் ஒரு முக்கிய பின்புலன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்களாம்.

ரூ. 11 லட்சம் வாடகை
அதாவது, மும்பை, பந்த்ரா பகுதியில் இருக்கும் அவர்களின் 2,460 சதுர அடி கொண்ட அப்பார்ட்மெண்ட்-ஐ மாதம் ரூ. 11 லட்சம் வாடகைக்கு 5 ஆண்டுகளுக்கு லீஸிற்கு விட்டுள்ளார்கள். 2016ஆம் ஆண்டு ரூ. 35 கோடிக்கு வாங்கிய இந்த வீட்டின் மூலம், எந்த வேலைக்கும் செல்லாமல் ஆண்டுக்கு சுமார் ரூ. 1.3 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்கள் ஆலியா, ரன்பீர் தம்பதியினர்.