2 வயசு குழந்தைக்கு ரூ. 250 கோடி சொத்து இருக்கா.. ரன்பீர் கபூர் - ஆலியா பட் செய்த விஷயம்
Alia Bhatt
Ranbir Kapoor
By Karthick Raja
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஒரு மகளும் உள்ளார்.
அவளுடைய பெயர் ரஹா கபூர். இந்த நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தங்களது மகளுக்காக ரூ. 250 கோடி செலவு செய்து புதிய பங்களா ஒன்று வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் இடத்தில் தங்களது மகள் ரஹா கபூர் என்கிற பெயரில் தான் இந்த பங்களாவை வாங்கியுள்ளாராம்.
இதன்மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்-ன் குழந்தை ரஹா கபூர் தான் என பாலிவுட் பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.