வீட்டை வாடகைக்கு விட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரன்வீர் கபூர்.. எவ்வளவு தெரியுமா
Ranbir Kapoor
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவருடைய மனைவி ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரம் என்பதை அனைவரும் அறிவோம்.
ரன்பீர் கபூர் முன்பு வசித்து வந்த பாலி ஹில்ஸ் வாஸ்து அபார்ட்மெண்டில் இருக்கும் தனது வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

2016ல் அவர் அந்த வீட்டை ரூ. 35 கோடி வாங்கி இருந்தார். அந்த வீட்டை தற்போது மாத வாடகை ரூ. 11 லட்சத்திற்கு மொத்தம் 5 வருட லீஸுக்கு விட்டுள்ளார்.
இதன் மூலமாக வருடம் 1.32 கோடி ரூபாய் அவர் சம்பாதிக்கிறார். ரன்பீர் - ஆலியா ஜோடி தற்போது ரூ. 250 கோடி செலவில் கட்டி இருக்கும் புது வீட்டுக்கு குடிபோயிருப்பது குறிப்பிடத்தக்கது.