கேட்பாரற்று பேருந்து நிலையத்தில் தூங்கும் ரங்கம்மா பாட்டி! கண்டுகொள்ளாத சினிமாத்துறை..

vadivelu rangammapatti
By Edward Dec 31, 2021 05:55 AM GMT
Report

சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு சமையல் செய்து கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தான் கே ஆர் ரங்கம்மா. சமீபத்தில் வடிவேலும் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். அவர் கேட்பாரற்று பீச்சில் பிச்சை எடுப்பதாக செய்திகள் வெளியாகியது.

அது பொய்யான தகவல் என்று சமீபத்திய ஒரு புகைப்படம் காட்டியுள்ளது. உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிதான் ரங்கம்மாவின் கொள்கையாம். அப்படி படங்கள் இல்லாவிட்டால் கைப்பையில் வைத்திருக்கும் மினி வியாபாரத்தை மேற்கொள்வாராம்.

அதன் மூலம் 300ல் இருந்து 400 வரை வருமானம் பெறுவதாக சமீபத்தில் அவரை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 13 பிள்ளைகளை பெற்று அனைவரையும் நல்ல இடத்திற்கு கொண்டு வந்த ரங்கம்மா சமீபத்தில் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

யாரும் கண்டுகொள்ளாமல் சினிமாவை சேர்ந்த பலர் இப்படி போகும் நிலையை பார்த்திருப்போம். அதில் ரங்கம்மாவும் சேர்ந்துள்ளார். சினிமாத்துறையினர் யாராவது இவருக்கு உதவுவார்களா?..


Gallery