கட்டாயப்படுத்தி அந்த இடத்துக்கு கூப்பிட்டு போன கணவர் ரவீந்தர்!! நடிகை மகாலட்சுமி செய்த செயல்
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இரு ஆண்டுகள் பார்த்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்தார். அதன்பின் ரவீந்தரை திருமணம் செய்து பல விமர்சனங்களை சந்தித்து வந்தார்.
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஒரு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் ரவீந்தர் பணமோசடி விசயத்தில் கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் ஜெயிலில் இருந்து வெளியில் வந்த ரவீந்தர் மனைவி மகாலட்சுமி ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் என்று கூறி அழுதிருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மகாலட்சுமியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சுவாரஷ்யமான விசயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், டின்னருக்கு கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போனேன். எதுவும் வேண்டாம் என்று சொன்னவள் நான் ஒரு தோசை மட்டும் ஆர்டர் செய்தேன்.
பின் பீஃப், ஃபோர்க், எக், மசாலா அம்லைட், கிரேப் ஜூஸ், மசால் தோசை, வடை என்று பின்னி தள்ளி சாப்பிட்டார்.
அதன்பின் காஃபின்னு சொன்னால். அப்போதான் எனக்கு மூச்சுவிட்டது என்று காமெடியாக சொல்லியுள்ளார். இதனை பார்த்த பலர் கல்யாணம் பண்ணதே அதுக்கு தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.