17 வயதில் ஆசிரியரை காதலித்தேன்!! ஓபனாக பேசிய பிரபல நடிகை...
ராஷி சிங்
சத்தீஸ்கரில் பிறந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி பின் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராஷி சிங். சிறு வயதிலேயே சினிமா மீது கனவு கொண்டு நடிகையாக வேண்டுமென ஆசைப்பட்ட ராஷி, 2021ல் ச்ஷி என்ற படத்தில் மூலம் அறிமுகமாகினார்.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு காரணமாக பிரேம் குமார், பூதத்தம் பாஸ்கர், பிரசன்ன வடனம், பிளைண்ட் ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான பாஞ்ச் மினார் என்ற படத்திலும் 3 ரோஸஸ் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் 17 வயதில் நடந்த காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 17 வயதில் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய ஆசிரியரை காதலித்ததாக வெளிப்படையாக கூறியிருக்கிறார் ராஷி சிங்.

ஆசிரியரை காதலித்தேன்
கல்லூரி நாட்களில் என் காதலர் எனது ஆசிரியர், எனக்கு விரிவுரையாளராகவும் இருந்த அவர் எனக்கு நிறைய உதவிகளை செய்தார். குறிப்பாக தேர்வு தாளை முன்கூட்டியே கொடுக்கும் அவர், செய்முறை தேர்வுகளில் வைவாவின் போது எந்தக்கேள்வியும் கேட்கமாட்டார்.
மாறாக, அங்கு ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து நாங்கள் நேரத்தை கடத்தினோம். அப்போது எனக்கு 17 வயது தான். இப்போது அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. வலைதளங்களில் என்னை பின் தொடர்கிறார் என்று ஓபனாக பேசியிருப்பது பலருக்கு வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.