அந்த நடிகருடன் மாலத்தீவுக்கு சென்றது என்ன தப்பு? கதறும் வாரிசு பட நடிகை

Vijay Deverakonda Rashmika Mandanna
By Dhiviyarajan Jan 26, 2023 05:02 PM GMT
Report

தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்திருந்தாலும், 2021 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார், இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் தந்தாலும், வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மாலத்தீவு

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன்  சேர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்திருந்தார்கள். அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என பல கிசுகிசு வந்தது.

மேலும் இருவரும் மாலத்தீவு சென்று தனிமையில் இருக்கிறார்கள் என்று பல செய்திகள் வெளிவந்தது. இது குறித்து பேட்டி ஒன்றில் ராஷ்மிகாவிடம் கேட்ட பொழுது அதற்கு அவர், " விஜய் தேவரகொண்டா என்னுடைய நண்பர், அவருடன் சுற்றுலா சென்றது என்ன தப்பு இருக்கிறது" என்று பதில் அளித்துள்ளார்.