தன் ஜாதி குறித்து தம்பட்டம் அடித்த ராஷ்மிகா மந்தனா.. அதிகரிக்கும் எதிர்ப்பு
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. ராஷ்மிகா கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஷ்மிகா பேசிய விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, 'எனக்கு முன் கொடவா சமூகத்தைச் சேர்ந்த யாரும் திரைப்படத் துறையில் நுழைந்ததில்லை. நான் தான் முதல் ஆள் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் எதிர்ப்பு
இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பவி பூவப்பா சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
அதில், " கொடுவா சமூகத்தில் இருந்து நடிகை பிரேமாவை தொடங்கி பலர் இதுவரை திரைப்படத் துறைக்கு வந்து சாதனை படைத்துள்ளனர், ராஷ்மிகா மந்தனா மட்டும் அல்ல.
இது ராஷ்மிகா மந்தனாவின் PR குழுவின் யோசனையாக இருக்கலாம். அல்லது ராஷ்மிகா மந்தனா பேசும் முறையே அப்படித்தான் இருக்கும். அதற்கு ராஷ்மிகா மந்தனாவின் பல பழைய பேட்டிகளே சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.