என்னது விஜய்யுடன் காதலா? இன்னும் நீங்க திருந்தவே இல்லையானு கேட்ட பிரபல நடிகை..

rumours rashmikamandanna vijaydevrakonda Aadavallu Meeku Johaarlu
By Edward Mar 05, 2022 09:25 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட மொழியில் ஆரம்பித்து சினிமா வாழ்க்கை தற்போது தென்னிந்திய சினிமாவில் நடித்து கொடுக்கட்டி பறந்து வருகிறார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்து மார்க்கெட்டை தூக்கி சம்பளத்தையும் ஏற்றி இருக்கிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் சில படங்களில் ஜோட்டியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியுள்ளது என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்று செய்திகள் பரவியது.

இருவரும் கோவாவிற்கு சென்று டின்னர் சாப்பிட்ட புகைப்படங்கள் கூட வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. இதனால் ஷாக்கான ராஷ்மிகா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் Aadavallu Meeku Johaarlu படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவருடன் நடித்ததில் இருந்து இந்த வதந்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

அதுபற்றி பதில் கூறி எனக்கு அலுத்துவிட்டது என கூறியுள்ளார். மேலும், திருமணத்திற்கு எனக்கு இந்த நேரம் இல்லை. அதற்கான நபர் பற்றி இன்னும் யோசிக்கவில்லை படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன்.