ராஷ்மிகா மந்தனாவின் தாய், தந்தையை பார்த்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க
ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் ஆகியது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அந்த புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட விமான நிலையத்தில் இருந்து வந்து, ஒரே காரில் இருவரும் ஏறி செல்லும் வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஆகிய தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்துள்ளார். இவருக்கு ஷிமன் மந்தனா என்கிற ஒரு தங்கையும் உள்ளார். இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..