இந்த கார்லயா வருவீங்க..சொகுசு கார் இல்லையா? ராஷ்மிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Rashmika Mandanna
By Parthiban.A Jun 27, 2022 06:15 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது படுபிஸியான ஹீரோயின்களில் ஒருவர். அவர் விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில டாப் ஹீரோ படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

ராஷ்மிகா அடிக்கடி மும்பை - ஹைதராபாத் இடையேபறந்துகொண்டிருக்கிறார். அவர் விமானத்தில் செல்லும்போது உடன் தனது செல்ல நாயும் வரும் என்றும் அதற்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க என தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வைக்கிறார் என செய்தி பரவியது.

அந்த செய்தி உண்மை இல்லை, நாய் ஹைதராபாத்தில் தான் இருக்கிறது என ராஷ்மிகா சொன்னாலும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்வதை விடுவதாக இல்லை.

இந்நிலையில் இன்று ராஷ்மிகா மும்பையில் ஒரு ஆபிஸ் வாசலில் இன்னோவா காரில் வந்து இறங்கிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அவர் காரில் இருந்து இறங்கி கேமராவை பார்த்து கியூட் ரியாக்ஷன்களை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இந்த கார்லயா வருவீங்க..சொகுசு கார் இல்லையா? ராஷ்மிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Rashmika Mandanna Gets Trolled For Innova Car

மிடில் க்ளாஸ் மக்கள் பயன்படுத்தும் இன்னோவா காரை ஏன் பயன்படுத்துகிறீர்கள். தயாரிப்பாளரிடம் சொல்லி ஒரு சொகுசு காரை அனுப்ப சொல்லி இருக்கலாமே என ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் கியூட்டாக தெரிய வேண்டும் என பொய்யாக கேமரா முன்பு நடிக்கிறார் எனவும் சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வீடியோவை நீங்களே பாருங்க

Gallery