விஜய் பட நடிகை ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா... மோசமான பேரை சம்பாதிச்சிட்டியேம்மா..
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரெட், புஷ்பா போன்ற படங்கள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார்.
தற்போது வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய், ராஷ்மிகா ஆட்டம் போட்ட பாடல் காட்சி லீக்கானது. பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

மேலுன் ரன்வீர் சிங்குடன் அனிமல் படத்திலும் டைகர் ஷெரஃப்புடன் புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கரண் ஜோகர் தயாரிக்கவுள்ள டைகர் ஷெரஃப், ரஷ்மிகா மந்தனா படத்தை எடுக்க முடியாது என்று பின்வாங்கிவிட்டாராம் கரண்.
இதற்கு அவர்கள் தயாரிப்பில் வெளியான படம் தோல்வி அடைந்ததாலும் புதுமுகமாக ராஷ்மிகா அறிமுகமாகி நடிப்பதாலும் தயாரிப்பில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட்டில் ராசி இல்லாத ஒரு பேரை உருவாக்கியுள்ளது. ஆனால் அமிதாப் பச்சனுடன் நடித்துள்ள குட்பை படத்தின் போஸ்டர் வெளியாகி கொஞ்சம் ஆறுதலை கொடுத்துள்ளதாம்.