தீபிகா படுகோன், நயன் தாரவையே ஓரங்கட்டி நேஷ்னல் கிரஷ்!! இத்தனை கோடி சம்பளமா?
ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியானது.
அல்லு அர்ஜுன் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தில் ஒரு முக்கிய பங்கை பதித்துள்ளார் ராஷ்மிகா. சுகுமார் இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இப்படத்தில் ராஷ்மிகாவின் ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியுள்ள ஸ்ரீலீலாவை காட்டிலும் ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.
இத்தனை கோடி சம்பளமா
இந்நிலையில் 8 கோடி அளவில் ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று வந்தார் ராஷ்மிகா. புஷ்பா முதல் பாகத்திற்கு 8 கோடி வாங்கிய ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2வில் 12 கோடியாக சம்பளம் வழங்கப்பட்டது.
தற்போது புஷ்பா 2 படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா 15 முதல் 16 கோடி வரை சம்பளத்தை ஏற்றி இருக்கிறாராம். அனிமல் 2 மற்றும் புஷ்பா 3 படங்களுக்கு ராஷ்மிகாவின் சம்பளம் 20 கோடி வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை இந்தியளவில் தீபிகா படுகோன் 15 கோடி சம்பளமும் தென்னிந்திய சினிமாவிலேயே நயன் தாரா 12 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. தற்போது இவர்கள் இருவரையும் ஓரங்கட்டி 15 முதல் 16 கோடி வரை சம்பளத்தை ஏற்றி தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.