விஜய் தேவரகொண்டாவுக்கு டாட்டா!! ராஷ்மிகா மந்தனாவின் புது பார்ட்னர் இவர் தான்..
கன்னட படங்களில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகையாக அனைவராலும் கண்டறியப்பட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தின் கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரெட் படத்திலும் நடித்தார். இதன்பின் தெலுங்கு சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
பின் சுல்தான், புஷ்பா, சீதா ராமம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். நேஷனல் கிரஷ் என்று இந்திய ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் வெளியிட்டு சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு, விஜய்யின் வாரிசு, ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியதில் இருந்து மும்பையில் செட்டிலாகிய ராஷ்மிகா பிரபல நடிகர் கார்த்தி ஆர்யனுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய புது பார்ட்னர் இவர்கள் தான் என்று கார்த்தி ஆர்யன் சமுகவலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
