எதையாவது பேசுவதற்கே பயமாக இருக்கு!! ஆதங்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா..
Rashmika Mandanna
Tamil Actress
Actress
By Jai
ராஷ்மிகா மந்தனா
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் Cocktail 2. இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார்.

Cocktail 2 படத்தின் வெற்றிக்குப்பின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, தன்னைப் பற்றி பரவும் வதந்திகள், திரித்து வெளியாகும் பேச்சுகள், சொல்லாத விஷயங்களை, தன்னுடைய வாயில் வைத்து பரப்பும் நடைமுறைகள் குறித்து பேசியுள்ளார்.
அதில், இப்போது எதையாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நான் சொல்லாத விஷயங்கள்கூட நான் சொன்னது போல் மாற்றி வெளியிடுகிறார்கள். தினமும் என்னைப்பற்றி இன்னும் என்ன தவறான செய்தி வரும் என்று தெரியாமல் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.