சினிமாவை தாண்டி புதிய தொழில் துவங்கிய ராஷ்மிகா மந்தனா.. என்ன தொழில் தெரியுமா

Rashmika Mandanna
By Kathick Jul 22, 2025 10:32 AM GMT
Report

ராஷ்மிகா 

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்திய சினிமாவில் தக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் இவர், இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தாண்டி புதிய தொழில் துவங்கிய ராஷ்மிகா மந்தனா.. என்ன தொழில் தெரியுமா | Rashmika Mandanna Starts New Business

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், தெலுங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

புதிய தொழில்

சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா புதிதாக தொழில் ஒன்றை துவங்கியுள்ளது. ஆம், நடிகை ராஷ்மிகா மந்தனா Dear Diary என்ற பெயரில் Perfume பிராண்ட் ஒன்றை புதிதாக தொடங்கி இருக்கிறார்.

சினிமாவை தாண்டி புதிய தொழில் துவங்கிய ராஷ்மிகா மந்தனா.. என்ன தொழில் தெரியுமா | Rashmika Mandanna Starts New Business

நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா என பல முன்னணி நடிகைகள் சினிமாவை தாண்டி பிசினஸ் செய்து வரும் நிலையில், தற்போது அவர்கள் வழியில் ராஷ்மிகாவும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.