ஆண்கள் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும்.. ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா!
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார்.

இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் 'தி கேர்ள்ஃபிரண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.
அந்த வலி!
இந்நிலையில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயயம்முரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மாதவிடாய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று ஜெயம்மு கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ராஷ்மிகா "ஆம், பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் மாதவிடாய் வலியை ஆண்கள் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். தற்போது ராஷ்மிகாவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
