இப்போ அவர் என்கூட இல்ல... நாங்க பிரிஞ்சிட்டோம்!.. ராஷ்மிகாவெளியிட்ட அறிக்கை
Rashmika Mandanna
Indian Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாகி வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது மேனேஜர் ராஷ்மிகாவிடம் இருந்து ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ராஷ்மிகா மந்தனா அந்த மேனேஜரை வேலையில் இருந்து நிக்கி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "எங்களிடையே எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இந்த பிரிவு சுமூகமானது . எங்களின் பிரிவு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது" என்று ராஷ்மிகா கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.