ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..

Vijay Deverakonda Rashmika Mandanna Marriage
By Edward Feb 01, 2026 06:38 AM GMT
Report

ராஷ்மிகா - விஜய்

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதை ரசிகர்கள் அனைவரும் அறிந்தாலும், இவர்கள் இருவரும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ.. | Rashmika Vijay Deverakonda Getting Married

நிச்சயதார்த்த மோதிரத்தை ராஷ்மிகா தனது கையில் அணிந்துள்ளார் என கூறி சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்களின் திருமண தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வருகிற 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் ஒரு நடிகரைத்தான் காதலிக்கிரேன் என மறைமுகமாக ராஷ்மிகா கூறி வந்தார்.

ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ.. | Rashmika Vijay Deverakonda Getting Married

நாளை திருமணம்

பிப்ரவரி இரண்டாம் தேதி திருமணம் நடக்கும் என்றும் ஒரு பேச்சு ஓடியது. உதய்பூரில் சிட்டி பேலஸில் தான்யா என்பவர் வீடியோ ஒன்றை எடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் திருமண ஏற்பாடுகள் ஜோராக நடக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் இங்கே திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் இங்கே திருமணம் நடக்கவிருக்கிறது என்று குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.