திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா குடியேறும் வீடு.. புகைப்படம் இதோ

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Mar 02, 2026 03:30 AM GMT
Report

கடந்த 26ஆம் தேதி நடிகை ராஷ்மிகாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். ராஷ்மிகா - விஜய் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளங்கள் மூலம் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா குடியேறும் வீடு.. புகைப்படம் இதோ | Rashmika Vijay Deverakonda New House

திருமணத்தை தொடர்ந்து வரும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடக்கவிருக்கிறது. அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்றும், வேறு யாரும் வர வேண்டாம், அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக புது வீட்டில் குடியேற உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடு திருமண கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்:

Gallery