கிசுகிசுக்கு இடம் கொடுக்கும் ராஷ்மிகா! தன்னைவிட 7 வயது மூத்த நடிகருடன் இப்படி செய்யலாமா
ராஷ்மிகா மந்தனா மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் சர்ச்சை அவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருக்கிறார் என்பது தான். இருவரும் இதை வெளிப்படையாக இதுவரை சொல்லவில்லை.
ஆனால், இந்த சர்ச்சை அவர்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருவரும் பதிவிடும் புகைப்படங்கள் ஒரே இடத்தில் எடுத்தது போல் இருக்கும். இருவரும் ஒரே ஹோட்டலில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் கூட அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
இப்படி தொடர்ந்து கிசுகிசுக்கு இடம் கொடுத்து வரும் இந்த ஜோடி தற்போது மீண்டும் அதே போல் ஒரு விஷயத்தை செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Happy Diwali my loves' என இருவரும் ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதை கவனித்த ரசிகர்கள், என்னது இது! ஒரு வேல இருக்குமோ என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதை நீங்களே பாருங்க.

