என் பொறுமைக்கும் எல்லையுண்டு..இனிமேல் இருக்கமாட்டேன்..நீக்குங்க!! கொந்தளித்த நடிகை ராஷ்மிகா..
நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷிமிகா மந்தனாவின் திருமணம் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து பல நிகழ்வுகளை நடத்தி போட்டோஷூட் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு அறிக்கையை வெளியிட்டு வேதனையடைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கொந்தளித்த நடிகை ராஷ்மிகா
அதில், இந்த வியத்தகு பயணத்தில் என்னுடன் இருந்த அன்புள்ள ரசிகர்கள், இந்த விஷயத்தில் அக்கறை கொண்ட மற்றவர்கள் : ஊடகங்கள் மற்றும் இணையத்திலுள்ள சில தனி நபர்களிடம் இருந்து வந்த துன்புறுத்தல்கள், தவறான தகவல்கள், தனிப்பட்ட தாக்குதல்களை நான் எதிர்கொண்டு 8 ஆண்டுகளாகிறது. வியூஸுக்காகவும், ரீச்சுக்காகவும், என்கேஜ்மெண்ட்டுக்காகவும், நான் சொன்ன வார்த்தைகளும், தவறான தகவல்களும் வெறுப்புடன் பரப்படுவதை நான் கவனித்து இருக்கிறேன்.
இவை அனைத்தும் எனக்கு வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்தினாலும், நான் தொடர்ந்து பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தேன். பொது பார்வையில் இருப்பது சில நேரங்களில் நியாயமற்ற விமர்சனங்களையும் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் எனக்கு நான் உண்மையாக இருந்து, அன்பையும், மகிழ்ச்சியையும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து வந்தேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை மீறப்பட்டுவிட்டது.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நம்பப்படும் பழைய, தனிப்பட்ட உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் பரப்பி வருகிறார்கள். அந்த உரையாடலில் ஒருசிறிய பகுதி வேண்டுமென்றே நீக்கப்பட்டு, சங்கடமான சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள். என் தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நோக்கமாக கொண்டு இவை பரப்பப்படுகிறது.
அவர்களால் இதை வைத்து என்ன செய்யமுடியும்? என் குடும்பத்தினரையும், என் நலம் விரும்பியையும், நண்பர்களையும் இந்த விஷயத்தில் தொடர்பு இல்லாதவர்களையும் அசெளகரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது முழுக்கமுழுக்க ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும் அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி நேர்மறையை பரப்பும் அதே வேளையில், ஒருசிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாகக் கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது.

என் பொறுமைக்கும் எல்லையுண்டு
8 ஆண்டுகளாக என்மீது மட்டும் தாக்குதல் நடந்தபோது அமைதியாக இருந்தேன். இப்போது மற்றவர்களை பாதிக்கும்போது நான் அமைதியாக இருக்கமுடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. 24 மணி நேரத்தில் என்னைப்பற்றி பரவும் தவறான தகவல்களையும் ஊடகத்தினர், தனிநபர்கள், இன்ஃபுளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026