விவாகரத்து நடிகர் தனுஷுக்காக கோடம்பாக்கத்தில் செட்டிலாகிய விஜய் பட நடிகை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பல, நானே வருவேன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து வாத்தி, கேப்டம் மில்லர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் அடுத்த ஒரு படத்திற்காக அக்கடதேசத்து நேஷ்னல் கிரஷ் நடிகை ஒருவர் கோடம்பாக்கத்தில் செட்டிலாகவுள்ளாராம்.

ராஷ்மிகா மந்தனா
அது வேற யாருமில்லை தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தானாம்.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான ராஷ்மிகா நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒப்பந்தமாகியுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.