ராட்சசனாக மிரட்ட களமிறங்கவுள்ள பாலிவுட் ஹீரோ! அப்போ அந்த கதாபாத்திரம்?

amalapaul vishnuvishal rakulpreetsingh Ratsasan akshykumar
By Edward Jun 30, 2021 07:39 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சைக்கோ கில்லர்களை வைத்து பல படங்கள் உருவாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ராம்குமார் இயக்கி விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து பெரியளவில் வெற்றிபெற்ற படம் ராட்சசன்.

சீரியல் கில்லராக படம் புதுவகையான முறையில் எடுத்து வெற்றி பெற்றதை அடுத்து இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். தற்போது அப்படத்தின் ரீமேக்கை அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பெல் பாட்டம் படத்தின் இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்குவுள்ளாராம்.

விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் இப்படத்திலும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளாராம். மேலும் அமலா பால் கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும், வில்லனாக நடித்த சைக்கோ கில்லர் கதாபாத்திரம் யாருக்கும் பொருந்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகிறார்கள்.