ரசிக வெறியில் சொந்த காசில் சூனிய வைத்த இயக்குனர்
Rajinikanth
Vijay
Leo
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக ரசிகர்கள் அடித்துக்கொள்வது எல்லாம் வாடிக்கை தான். ஆனால், ஒரு நடிகனுக்காக இயக்குனர் அடித்துக்கொள்வது எவ்வளவு மோசம் என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வு தெரிய வைத்துள்ளது.
சமீபத்திய லியோ வெற்றி விழாவில் இயக்குனர் ரத்னா பேசும் போது, விஜய் மீது இருக்கும் அன்பை வெளிகாட்ட, என்ன தான் உயர பறந்தாலும் சாப்பிட கீழ இறங்கி தான் வரனும் என்று மறைமுகமாக ரஜினியை சீண்டினார்.
என்ன இது ஒரு இயக்குனராக இருந்துக்கொண்டு இதெல்ல தேவையா, தன் தொழிலில் மேலே செல்ல என்ன வழியோ அதை செய்யாமல், இப்படி ரசிக வெறியால் உச்ச நடிகர் ஒருவரை வம்பிழுப்பது என்ன விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்