விஜய் மகன் சஞ்சய்யை காதலித்த 17 வயது சீரியல் நடிகை! ஆசையெல்லாம் காத்தோடு பறந்து விட்டதே..

Vijay Serials
By Edward May 09, 2022 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியின் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

குடும்பத்துடன் சில நாட்கள் வெளிநாட்டு சுற்றுலா சென்ற பிறகு மீண்டும் ஹைதரபாத்திற்கு சென்றுள்ளார் விஜய். இந்நிலையில், ஜில்லா படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்த குட்டி பெண் ரவினா தாஹா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும் நடித்தால் அவருடன் தான் என்று கூறியிருந்தார்.

இதனை பலர் இணையத்தில் விஜய் மகனின் புதிய காதலி என்று செய்திகளை பதிவிட்டு வைரலாக்கினர்.

ஏற்கனவே தன் மகனுக்கு நடிக்க விருப்பமில்லை என்று விஜய் சமீபத்தில் நெல்சன் பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும் என்று தெரிவித்திருந்தார்.

விஜய் ஏற்கனவே போக்கிரி படத்தின் போது ஒரு பாடலில் மகன் சஞ்சய்யை ஆடவைத்தார். அதன்பின் வெளிநாட்டுக்கு சென்று சினிமா சம்மந்தமான பட்டப்படிப்பினை படிக்க ஆரம்பித்து சமீபத்தில் அதனை முடித்துள்ளார்.

விஜய்யின் இந்த கருத்தால் ரவினா தாஹாவின் கனவு காத்தோடு பறந்து போய்விட்டதே என்று ரசிகர்கள் ரவீனாவிடம் கூறி மெசேஜ் செய்து வருகிறார்கள்.