பிரம்மாண்ட மண்டபம் கழுத்தில் தாலியுடன் 17 வயது சீரியல் நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் சைக்கோ சம்பந்தமாக படங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி பெற்றி பெற்ற படம் தான் ராட்சசன். நடிகர் விஷ்ணுவிற்கும் நடிகை அமலா பாலிற்கு சினிமாவில் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்ற படம் தான் இது. ராட்சசன் படத்தில் அனைவரையும் கவர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி.
அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கதாபாத்திரங்கள் வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனா தான். ஆசிரியரால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வசனமே இல்லாமல் பார்வையிலேயே மிரட்டியிருப்பார். இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார். தற்போது பிரபலதொலைக்காட்சி சீரியலான மெளனராகம் 2வில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக க்ளாமர் ஆடையில் குத்தாட்டம் போட்டோஹூட் என புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சீரியல் திருமண காட்சி ஒளிப்பரப்பாகி வரும் நிலையில், கழுத்தில் தாலியுடன் புகைப்படம் மற்றும் சக நடிகருடன் எடுத்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் யாருடன் திருமணம் நடந்தது என்றும் வருணா, தருணா என்றும் ஷாக்காகி கேட்டு வருகிறார்கள்.