17 நாள் ஷூட்டிங் போன நடிகை!! பல காட்சிகளை வெட்டித்தூக்கி ஏமாற்றிய இயக்குனர் மாரிசெல்வராஜ்..
தென்னிந்திய சினிமாவில் 2000 படங்களுக்கு மேல் டப்பிங் துறையில் இருந்து பணியாற்றி பிரபலமானவர் ஸ்ரீஜா ரவி. முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்து வந்த ஸ்ரீஜா பல படங்களில் நடிகையாகவும் பணியாற்றி வந்தார்.
அவருக்கு அடுத்து அவரது மகள் ரவீனா ரவியும் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். லவ் டூடே படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாகவும் மாமன்னன் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாகவும் நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மாமன்னன் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். மாமன்னன் படத்திற்கு மொத்தம் 17 நாட்களுக்கு ஷூட்டிங் சென்றதாகவும் டயலாக் எதுவும் இல்லை, அந்த கேரக்டருக்கு பேர் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 17 நாட்கள் நடித்தேன் ஆனால் டயலாக் இல்லை. அப்படி நடித்த பல காட்சிகள் இருந்ததை தூக்கிவிட்டார்கள். காமினேஷன் சீன் இருந்ததே என கொஞ்சம் வருத்தப்பட்டதாகவும் என்னுடைய ரீச் பெரியளவில் பேசப்பட்டதை பார்த்தப்பின் வருத்தம் இப்போது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் ரவீனா ரவி.