மீண்டும் மீண்டுமா, ஆர்த்தியை வெறுப்பேற்ற ரவி மோகன் செய்த செயல்.. பாவம்யா!

Viral Video Tamil Actors Ravi Mohan
By Bhavya May 11, 2025 05:30 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய நிலையில், ஆர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில் ரவி மோகன் பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என இரு தரப்பினரும் விளக்கம் கொடுத்தனர்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடுப்பான ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமணம் வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை பகிர்ந்தார். இந்த பதிவுக்கு சில சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மீண்டும் மீண்டுமா, ஆர்த்தியை வெறுப்பேற்ற ரவி மோகன் செய்த செயல்.. பாவம்யா! | Ravi Mohan Again With His Lover

செய்த செயல்

இந்நிலையில், ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் மீண்டும் ரவி மோகன் கெனிஷா உடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.