ஜாலியாக ஆட்டம் போடும் ரவி மோகன்.. கெனிஷா எங்கே? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Tamil Cinema Tamil Actors Ravi Mohan
By Bhavya Jul 14, 2025 08:30 AM GMT
Report

ரவி மோகன்

தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது, அவரது வாழ்க்கையை கவனிப்பது என இருந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி கடந்த வருடம் அவர் விவாகரத்து செய்தி வெளியாக பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோகோடு (Brocode) என்ற படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

ஜாலியாக ஆட்டம் போடும் ரவி மோகன்.. கெனிஷா எங்கே? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! | Ravi Mohan Dance Video Get Trolled

கெனிஷா எங்கே?

இந்நிலையில், ரவி மோகன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் செம ஜாலியாக நடனம் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.