ரூட்டை மாற்றிய ஆர்த்தி ரவி.. குஷ்பூவும், அம்மாவும் கூடவே இருக்காங்களே
ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரவி மோகன் தன்னுடைய தோழியுடன் வெளியுலகத்தில் ஜோடியாக உலாவியும் ஆர்த்தி தன் மகன்களுடன் வெளிநாட்டு அவுட்டிங் சென்றும் வருகிறார்.
சிங்கிளாக இருக்கும் ஆர்த்தி தன்னுடைய தாய் சுஜாதா, நடிகை குஷ்பூ ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆர்த்திக்கு நிழலாக குஷ்பூ இருந்துகொண்டே இருந்தார்.

இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் விரைவில் ஆர்த்தியின் வாழ்க்கையில் நல்லது நடக்க அந்த ஏழுமலையான் அனுமதி வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
அதுமட்டுமின்றி இத்தனை நாட்களாக ஆர்த்தி கோயிலுக்கு போகும் வீடியோக்கள் பெரும்பாலும் வந்ததில்லை. அதிகம் வெளிநாடு பயண வீடியோக்கள், புகைப்படங்களைத்தான் பதிவேற்றுவார். இப்போது ரவியுடனான பிரிவுக்கு பிறகு ஆர்த்தி தனது ரூட்டை கொஞ்சம் மாற்றிவிட்டாரோ என்றும் கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.